எஸ்ஐஏ விமானத்தில் 12 மணி நேரம் பயணம் செய்த மைனா

எஸ்ஐஏ விமானத்தில் 12 மணி நேரம் பயணம் செய்த மைனா

1 mins read

சிங்கப்பூரிலிருந்து லண்டனுக்குப் பறந்து சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பிசினஸ் வகுப்பில் 12 மணி நேரம் மைனா பறவை ஒன்று பயணம் செய்தது. SQ322 விமானத்தில் ஜனவரி 7ஆம் தேதி அந்தப் பறவை காணப்பட்டதாக சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் பேச்சாளர் ஒருவர் நேற்று உறுதிப்படுத்தினார். விமானத்தில் மைனா இருந்ததைக் காட்டும் காணொளி ஒன்றும் ஃபேஸ்புக்கில் பதிவேற் றப்பட்டது. அதைப் பிடிக்க ஊழியர் ஒருவர் முயன்றதையும் அது கையில் அகப்படாமல் பறந்ததை யும் அந்தக் காணொளி காட்டியது. பிறகு அந்த மைனா, சில பயணிகளின் உதவியுடன் பிடிக் கப்பட்டது. அந்தப் பறவை பிறகு லண்டனில் விலங்குத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டது. அந்தப் பறவை விமானத் திற்குள் எப்படி சென்றது என்பது பற்றிய விவரங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவிக்க வில்லை.