கோத்தா கினபாலு: கிட்டத்தட்ட ஐந்து மணி நேரமாகக் கத்திமுனையில் ஒரு குழந்தையைப் பிடித்து வைத்திருந்த ஆடவர் ஒருரை போலிஸ் சுட்டுக்கொன்றது. மலேசியாவின் சாபா மாநிலத் தலைநகர் கோத்தா கினாபாலுவுக்கு அருகிலுள்ள தாமான் தெலிபோக் ரியாவில் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது. அடுக்குமாடி வீட்டு ஒன்றின் நான்காவது மாடியில் அந்தப் பெண்குழந்தை பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது 30 வயது மதிக்கத்தக்க இந்த ஆடவர் அதனைத் திடீரென பிடித்து வைத்துக்கொண்டார். குழந்தையைக் காப்பாற்ற முயன்ற வட்டாரவாசிகள் எடுத்த முயற்சிகள் பயன் அளிக்கவில்லை. சுமார் நான்கு மணி அளவில் தகவல் அறிந்த போலிசார் அங்கு சென்று குழந்தையை மீட்டனர் கழுத்தில் கீறல்களுடன் குழந்தை உயிர் தப்பியது. அது விரைவில் குணமடையும் என நம்புவதாக சாபாவின் போலிஸ் ஆணையாளர் ஓமார் மம்மா தெரிவித்தார். போலிசாரின் விசாரணை தொடர்கிறது.
குழந்தையைக் கடத்திய ஆடவரைச் சுட்டுக்கொன்ற போலிசார்
1 mins read
-

