சாதாரண நிலை தேர்வு: ஐந்துக்கும் அதிகமான பாடங்களில் 84.8% மாணவர்கள் தேர்ச்சி

சாதாரண நிலை தேர்வு: ஐந்துக்கும் அதிகமான பாடங்களில் 84.8% மாணவர்கள் தேர்ச்சி

1 mins read
c4bde798-82de-4fdf-9738-025331fb0aaf
-

கடந்தாண்டு பொதுக்கல்விச் சான்றிதழ் சாதாரண நிலை தேர்வை எழுதிய மாணவர்களில் 84.8% பேர் ஐந்துக்கும் அதிகமான பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த விகிதங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளைக் காட்டிலும் அதிகம். 2017ல் 83.4 விழுக்காட்டினரும் 2016ல் 84.3 விழுக்காட்டினரும் ஐந்து பாடங்களுக்கு மேல் தேர்ச்சி பெற்றனர்.

மாணவர்களில் 96.4 விழுக்காட்டினர் மூன்று அதிகமாக பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டு வாரியமும் இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டன.

தொடக்கக்கல்லூரிகள், மில்லேனியா கல்விக்கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழிற்நுட்பக் கல்விக் கழகங்கள் ஆகியவற்றுக்குச் செல்ல விரும்பும் மாணவர்கள் தங்களது சாதாரண நிலை தேர்வு முடிவுகளைக் கொண்டு 'ஜேஏஇ' மாணவர் சேர்க்கை வழியாக விண்ணப்பிக்கலாம்.

இன்று பிற்பகல் 3 மணி முதல் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 18) வரை 'ஜேஏஇ'க்கு விண்ணப்பிக்கலாம்.