'ஜிசிஇ' கூடுதல் கணக்குப் பாடத்திற்கானத் தேர்வு தாட்கள் காணாமல் போனதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்தாண்டு நவம்பரில் இந்தத் தாட்கள் பிரிட்டனில் ரயில் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டபோது அவை காணாமல் போனதாகத் தெரிய வந்தது.
தேர்வுத் தாட்களின் மதிப்பீட்டாளர் ஒருவர் அந்த 32 தாட்களைத் தனது பையில் வைத்திருந்தார். அந்தப் பையை மற்றொருவர் தனது பை என தவறாக எண்ணி அதனை எடுத்துச் சென்றுவிட்டதாக கேம்ப்ரிட்ஜ் மதிப்பீட்டு அமைப்பு கூறியது.
கூடுதல் கணக்கியல் பாடத்தின் மொத்த மதிப்பெண்களில் 56 விழுக்காட்டைக் கொண்டிருக்கும் 'தாள் இரண்டு' தாட்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
20-17ஆம் ஆண்டு நவம்பரில் 'ஜிசிஇ' மேல்நிலை ரசாயனப் பாடத்திற்கான தேர்வுத் தாட்கள் திருடப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு இச்சம்பவம் நிகழ்ந்தது. இதுநாள்வரை அந்தத் தேர்வுத் தாட்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
காணாமல் போன 32 தாட்களில் 20 நன்ஹுவா உயர்நிலைப் பள்ளியையும் 12 ஹோங் கா உயர்நிலைப் பள்ளியையும் சேர்ந்தவை.

