சீனப் புத்தாண்டுக்காக புதிய பண நோட்டுகள் விநியோகம்

சீனப் புத்தாண்டுக்காக புதிய பண நோட்டுகள் விநியோகம்

1 mins read
3485a736-5242-40ce-9dfb-daa95d325e79
-

சீனப் புத்தாண்டுக்காகப் புதிதாக அச்சிடப்பட்டுள்ள பண நோட்டுகளை பெறுவோர் நாளை முதல் 42 தானியக்க தற்காலிக வங்கி இயந்திரங்களிலிருந்து பெற முடியும் என்று டிபிஎஸ் வங்கி தெரிவித்தது.

இத்தகைய இயந்திரங்கள் 2015ஆம் ஆண்டில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டன. மக்கள் கழகத்துடன் இணைந்து டிபிஎஸ் இந்தத் திட்டத்தை தொடங்கியது.

புதிய இயந்திரங்கள் பிப்ரவரி நான்காம் தேதி வரை சிங்கப்பூர் முழுவதும் உள்ள 20 சமூக மன்றங்களில் இயங்கும் என்று டிபிஎஸ் கூறியது.