சிங்கப்பூருக்கு அருகில் கவிழ்ந்த கப்பல்

சிங்கப்பூருக்கு அருகில் கவிழ்ந்த கப்பல்

1 mins read

கடலுக்கு அடியில் குழாய்களையும் மின்கம்பிகளையும் பொருத்தும் 'எம்பி ஸ்டார் சென்சுரியன்' கப்பல் எண்ணெய்க் கப்பலுடன் மோதியதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் நீரிணையிலுள்ள இந்தோனீசிய நீர்ப்பகுதியில் மூழ்கியது. இந்தச் சம்பவத்தில் யாரும் மரணம் அடையவில்லை.

பிந்தான் தீவுக்கு வடக்கில் இச்சம்பவம் நேர்ந்தது.

'எம்பி ஸ்டார் சென்சுரியன்' கப்பல், வனுவாட்டுக் கொடியைத் தாங்கியிருந்தது.

கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டதாகவும் அவர்கள் இப்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் பிந்தானின் தஞ்சுங் உபினில் தளம் கொண்டுள்ள இந்தோனீசிய கடற்காவல் படையின் தலைவர் சம்சுல் நிஸார் தெரிவித்தார்.