சிங்கப்பூர்-மலேசிய அமைச்சர்களின் மனந்திறந்த பேச்சு வார்த்தை

சிங்கப்பூர்-மலேசிய அமைச்சர்களின் மனந்திறந்த பேச்சு வார்த்தை

1 mins read

மலேசியாவுடனான தன்னுடைய வருடாந்திர கூட்டம் ஒத்திவைக் கப்படுவதாக சிங்கப்பூர் கடந்த சனிக்கிழமை அறிவித்தது. அடுத்த நாள் சிங்கப்பூருக்கு வந்த மலேசிய பொருளியல் அமைச்சர் அஸ்மின் அலியுடன் தாம் மனந்திறந்த பேச்சு வார்த்தை நடத்தியதாக வெளி யுறவு அமைச்சர் விவியன் பால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் ஆற்றுக்கு அருகில் பேசியவாறே அவர்கள் நடந்து செல்லும் படத்தைப் பதிவேற்றம் செய்து இரு அமைச்சர்களும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் தங்கள் கருத்துகளை வெளிப் படுத்தினர். "மலேசிய பொருளியல் அமைச்சர் அஸ்மின் அலியுடன் நான் இரவு உணவு அருந்திய வாறு பல இருதரப்பு விவகா ரங்கள் பற்றி பேசினேன். உலக ளாவிய பொருளியல் உருமாற் றம் நடைபெற்றுவரும் வேளையில் சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து பணியாற்ற பல வாய்ப்புகள் உள்ளதாக நாங்கள் ஒப்புக்கொண்டோம்," என்று டாக்டர் விவியன் தமது ஃபேஸ் புக் பக்கத்தில் கூறியிருந்தார்.

தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங்கும் (இடது) மலேசிய பொருளியல் அமைச்சர் அஸ்மின் அலியும் நேற்றுக்காலை காலை உணவு சந்திப்பில் இருநாட்டு விவகாரங்கள் பற்றி பேசினர். படம்: லாரன்ஸ் வோங் ஃபேஸ்புக்