2017ல் 407,000 ஊழியர்களுக்கு $650 மி. கூடுதல் வருமானம்

2017ல் 407,000 ஊழியர்களுக்கு $650 மி. கூடுதல் வருமானம்

1 mins read

சிங்கப்பூரில் 2017ல் மொத்தம் 407,000 குறைந்த வருமான ஊழி யர்களுக்கு வேலைநலன் கூடுதல் ஊதியத் திட்டத்தின் கீழ் மொத்தம் $650 மில்லியன் கொடுக்கப்பட்டது. அந்தத் தொகையைப் பெற்றவர் களில் ஊழியர்கள், சுய வேலை வாய்ப்பு ஊழியர்கள் ஆகிய இரு பிரிவுகளையும் சேர்ந்தவர்களாகத் தங்களைக் வகைப்படுத்திக் கொண்டவர்கள் ஆகியோர் அடங் குவர். மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று மன்றத் தில் இந்த விவரங்களைத் தெரி வித்தார். "வேலைநலன் கூடுதல் ஊதியத் திட்டம் குறைந்த வரு மான ஊழியர்களுக்குத் தொடர்ந்து உதவுவதை எங்கள் அமைச்சு உறுதிப்படுத்தும்.

"மாதம் $2,000க்கும் குறை வான வருமானம் ஈட்டுவோருக்கு இத்திட்டம் உதவுகிறது. இந்தத் திட்டத்தை அமைச்சு இப்போது மறுபரிசீலனை செய்து வருகிறது. "கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற வருவாய் உயர்வுகளை கருத்தில் கொண்டு இடம்பெறும் மறுபரிசீலனையின் விவரங்களை பரிசீலனை முடிந்ததும் அறிவிப் போம்," என்றும் கூறினார் அவர். வேலைநலன் கூடுதல் ஊதியத் திட்டம், ஊழியரின் வயதையும் வருமானத்தை யும் அடிப்படையாகக் கொண்டு பலருக்கும் உதவி வரு கிறது. இந்தத் திட்டத்தின்படி குறைந்த வருமான ஊழியர்கள் ஆண்டுக்கு ரொக்கமாகவும் மத் திய சேம நிதிச் சந்தாவாகவும் $3,600 வரை பெறுகிறார்கள்.