16 வயதுக்குக் கீழ், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கைவிலங்கு போடுவதில்லை

16 வயதுக்குக் கீழ், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கைவிலங்கு போடுவதில்லை

1 mins read

கைது செய்யப்படுவோர் தப்பித்துச் செல்லுதலைத் தடுக்கும் நோக்கத் தில் அவர்களுக்கு கைவிலங்கிடப்படுகிறது. ஆனால், அதேவேளையில், கைதாகும் 16 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பொதுவாகக் கைவிலங்கிடப்படுவ தில்லை என்று உள்துறை அமைச் சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் கூறினார். இந்த முறை சிறைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளவர்களிடமும் விசாரணைக் காவலில் வைக்கப் பட்டிருப்போரிடமும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும் திரு அம்ரின் விவரித்தார்.

கொலை, பாலியல் பலாத்காரம், போதைப்பொருள் கடத்தல் போன்ற கடும் குற்றங்களைப் புரி வோரைச் சட்ட அமலாக்க அதிகாரிகள் அனேகமாக கைவிலங்கிடுவார்கள். மேலும் நிலையற்ற அல்லது முரட்டுத்தனமாக நடந்துகொள் வோருக்கு எதிராக கைவிலங்கு களை அதிகாரிகள் பயன்படுத்துவார்கள் என்றும் திரு அம்ரின் சொன்னார். கைது செய்யப்படுவோருக்கு எதிராக விலங்கிடும் கொள்கை பற்றி வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி உறுப்பினர் பேட்ரிக் டே கேட்ட கேள்விக்கு திரு அம்ரின் மன்றத்தில் பதிலளித்தார்.