உணவு நிலைய உரிமம் ரத்து பற்றி உடனடியாகத் தெரிவிக்க முயற்சிகள்

உணவு நிலைய உரிமம் ரத்து பற்றி உடனடியாகத் தெரிவிக்க முயற்சிகள்

1 mins read
146dd8e8-a84e-425c-971f-f718faa7c3bf
-

உணவு சேவைத்துறையாளர்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்போது அது பற்றி பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள வகைசெய்யும் வழிகள் பற்றி தேசிய சுற்றுப்புற வாரியம் ஆராய்ந்து வருகிறது. தன்னுடைய இணையத்தளங்களில் உடனடி தொடர்புகளை இடம்பெறச் செய்வது பற்றி இந்த வாரியம் பரிசீலித்து வருகிறது. அத்தகைய உரிமம் ரத்து செய் யப்படும்போது அது பற்றி உடன டியாக வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க தன்னுடைய myENV செயலியில் திடீர் அறிவிப்புகளை வெளியிடுவதும் அமைச்சின் திட்டம். உணவுத்தொழில் நடத்துவோர் எந்த அளவுக்குத் தூய்மையாகச் செயல்படுகிறார்கள் என்பதை வாடிக்கையாளர்கள் எளிதாகத் தெரிந்துகொள்ளவும் வாரியம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர், நேற்று நாடாளுமன்றத்தில் இந்த அறிவிப்புகளை விடுத்தார்.

உணவை அதைப் பயன்படுத்த வேண்டிய குறித்த காலத்திற்குள் பயன்படுத்தும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர். கோப்புப்படம்