ஊழியர் விடுதியில் பொங்கல் குதூகலம்

எஸ். வெங்கடேஷ்வரன்

தோரணம், வாழையிலை, மாவிலை என வெளிநாட்டு ஊழியர்கள் தங் கியுள்ள ‘தி லியோ’ விடுதி, விழாக்கோலம் பூண்டிருந்தது. காக்கி புக்கிட் வட்டாரத்தில் அமைந்துள்ள மினி என்வைரன் மண்ட் சர்வீஸ் (எம்இஎஸ்) நிறு வனத்தின் இவ்விடுதி வாசிகள் பொங்கல் கொண்டாட்டத்தைக் குதூகலத்துடன் நேற்று முன்தினம் கொண்டாடினர். கொண்டாட்டத் தில் கிட்டத்தட்ட 200 ஊழியர்கள் கலந்துகொண்டனர். மாலை ஐந்து மணிக்குத் தொடங்கிய பொங்கல் கொண்டாட் டத்தில் வேலை முடிந்து விடுதிக் குத் திரும்பிய ஊழியர்களும் பின் னர் சேர்ந்துகொண்டனர். கொண்டாட்டம் 15 ஊழியர்கள் கொண்ட குழுவால் ஏற்பாடு செய் யப்பட்டது. அக்குழு கொண்டாட்டத் திற்கு இரு நாட்கள் முன்பே பொருட்கள் வாங்குவதும் அலங் காரம் செய்வதுமாக ஆயத்த வேலைகளில் இறங்கியது.

“இவ்வாண்டின் பொங்கல் கொண்டாட்டம், தம் சொந்த ஊரில் கொண்டாடுவது போன்ற உணர்வை ஊழியர்களுக்கு ஏற் படுத்தியது. ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இக்கொண்டாட்டம் ஊழியர்களுக்குப் பேரானந்தத் தைத் தந்து வருகிறது,” என்றார் விடுதியின் செயல்பாட்டுத் துறை மேலாளரான திரு எஸ்.கே. பாவா பஹ்ருதின், 35. ஏற்பாட்டுக் குழு வில் பங்ளாதேஷை சேர்ந்த முஸ் லிம் ஊழியர் ஒருவரும் இருந்தார் என்றும் விடுதியின் பொங்கல் விழாவில் இந்துக்கள் உட்பட மற்ற சமயத்தினரும் கலந்து கொண்டு மெருகூட்டினர் என்றும் குறிப்பிட்டார் அவர். கொண்டாட்டத்தில் எம்இஎஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் ஹாஜி எஸ்.எம் அப்துல் ஜலீல் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஊழியர்கள் அனைவரும் இனிப்புகள் உண்டு பொங்கல் திருவிழா உணர்வில் திளைத்தனர்.

‘தி லியோ’ தங்கும் விடுதியின் வெளிநாட்டு ஊழியர்கள் பால் பொங்கி வருவதைப் பார்த்து வழிபடுகின்றனர். படம்: எம்இஎஸ் குழுமம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Jul 2019

மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் விதி மீறுவதை தடுக்க நடவடிக்கை

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கும் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடமைச் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிண்டாவின் தலைவரும்  கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி  இந்திராணி ராஜாவின் முன்னிலையில் கையெழுத்தானது.

20 Jul 2019

இந்திய சமுதாய மேம்பாட்டுக்கு சிண்டா, லி‌‌‌ஷா அமைப்புகளுக்கிடையே ஒப்பந்தம்