சை சீ ரோட்டில் மாண்டு கிடந்த ஆடவர்

தொழிற்சாலை விபத்து ஒன்றைத் தொடர்ந்து பங்ளாதே‌ஷிய ஊழியர் ஒருவர் புளோக் 805 சை சீ ரோட்டில் மாண்டு கிடக்கக் காணப்பட்டார். 

நேற்று மாலை 6.53 மணிக்கு உதவி கோரி அழைப்பு வந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. 

அந்த 28 வயது ஆடவர் பேச்சு மூச்சின்றித் தரையில் கிடந்ததாக போலிசார் தெரிவித்தனர். சம்பவ இடத்திலேயே அவர் மாண்டதாக துணை மருத்துவப் படையினர் தெரிவித்தனர்.

இதனை இயற்கைக்குப் புறம்பான மரணம் என வகைப்படுத்தியுள்ள போலிசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.