சிங்கப்பூரின் வருடாந்திர வெப்பநிலை பதிவுகளில் எட்டாவது வெப்பமிகுந்த ஆண்டாக 2018 இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு முழுதும் வெப்பநிலை தொடர்ந்து சராசரி அளவை மிஞ்சியே இருந்ததாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்தது.
2018ன் சராசரி வெப்பநிலை 27.9 டிகிரி செல்சியசாக இருந்தது. இது, 2017ஆம் ஆண்டின் சராசரி வெப்பநிலையான 22.7 டிகிரி செல்சியசைக் காட்டிலும் அதிகம்.
கடந்தாண்டு டிசம்பர், சிங்கப்பூரின் டிசம்பர் மாதங்களில் இரண்டாவது ஆக வெப்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.

