சேவை குளறுபடிகளுக்காக மன்னிப்பு கேட்கும் சிங்போஸ்ட்

சேவை குளறுபடிகளுக்காக மன்னிப்பு கேட்கும் சிங்போஸ்ட்

1 mins read
a1d01cdc-c1ad-4928-bac6-0d68ebab14a9
-

வேலைப்பளு அதிகமாக உள்ள காரணத்தினால் அண்மையில் அஞ்சல் சேவையில் ஏற்பட்ட சில குளறுபடிகளுக்கு சிங்போஸ்ட் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் அஞ்சல் விநியோகம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தததாக சிங்போஸ்ட் தெரிவித்தது.

கடிதங்களை விநியோகிக்க தனது அஞ்சல்காரர்கள் ஏறக்குறைய 20 கூடுதலான முகவரிகளுக்குச் செல்லவேண்டியிருந்ததாகவும் அவர்கள் தங்களது வேலை நேரத்தைத் தாண்டி பணியாற்றியதாகவும் சிங்போஸ்ட் நிறுவனம், ஃபேஸ்புக்கில் நேற்று பதிவிட்டது.

"விடுப்பில் இருந்த பணியாளர்களைத் திரும்ப வேலைக்கு அழைத்ததுடன் நாங்கள் நிறுவன வளங்களை வழக்கத்தைவிட அதிகமாக பயன்படுத்தினோம். ஆயினும், எங்களது சேவைத்தரம் பாதிக்கப்பட்டது," என்றது சிங்போஸ்ட்.

சிங்போஸ்ட் சேவைத்தரம் குறித்த விமர்சனங்கள் கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.