கல்வி அமைச்சின் பாலர் பள்ளிப்பதிவு: குறைந்த வருமானக் குடும்பப் பிள்ளைகளுக்கு முன்னுரிமை

கல்வி அமைச்சின் பாலர் பள்ளிப்பதிவு: குறைந்த வருமானக் குடும்பப் பிள்ளைகளுக்கு முன்னுரிமை

1 mins read
5cfdbdff-96e3-479a-b516-cf6bfad9ea35
-

கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை 2020ஆம் ஆண்டு சேர்க்க விரும்பும் பெற்றோர் இணையம் வழியாகப் பதிவுசெய்யலாம். பதிவுக்கான விண்ணப்பத்தையும் ஆவணங்களையும் நேரில் சமர்ப்பிக்கத் தேவையில்லை. பெற்றோருக்கு, கூடுதல் வசதியையும் எளிதான பயன்பாட்டையும் இணையம் வழி பதிவு வழங்கும் என அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் அடுத்த ஆண்டு ஜனவரியில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான 2019ஆம் ஆண் டின் இணையப் பதிவு நடவடிக்கை அடுத்த மாதம் 8ஆம் தேதி காலை 9 மணி முதல் 11ஆம் தேதி மாலை 4 மணி வரை நடைபெறும். சேர்க்கை முடிவுகள் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதிக்குள் பெற்றோருக்குத் தெரிவிக்கப்படும். தற்போது கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகள் 23 செயல்பாட்டில் இருக்கின்றன.