சிங்போஸ்ட் மன்னிப்புக் கோரியது

சிங்போஸ்ட் மன்னிப்புக் கோரியது

1 mins read
b274dd19-1d02-4644-b643-a390f0a026f6
-

அண்மையில் கடிதங்களை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஏற்பட்ட தாமதத்துக்குச் சிங்போஸ்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் எதிர்பார்த்ததைவிட அதிகமான கடிதங்களைச் சிங்போஸ்ட் ஊழியர்கள் கையாள வேண்டிய சூழல் ஏற்பட்டதால் சேவையில் குறைபாடு ஏற்பட்டதாக அது குறிப்பிட்டது. அதன் ஊழியர்கள் வழக்கத்தைவிடக் கூடுதல் நேரம் பணியாற்றியதாகவும் விடுப்பில் இருந்தவர்கள் வரவழைக்கப்பட்டதோடு கூடுதல் மனிதவளம் பயன்படுத்தப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.