கள்ள சிகரெட்டுகள் சிக்கின; அறுவர் கைது

கள்ள சிகரெட்டுகள் சிக்கின; அறுவர் கைது

1 mins read
Google News Preferred Icon

அட்மிரல்டி ஸ்திரீட்டில் இம்மாதம் 11ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் தொழிற்சாலைக் கட்டடம் ஒன்றில் 3,800 கார்ட்டன் கள்ள சிகரெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை பறிமுதல் செய்யப்பட்டதுடன் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ள சிகரெட்டுத் தொடர்பான நடவடிக்கைகள் அந்தக் கட்டடத்தில் மேற்கொள்ளப்படுவதாகக் கிடைத்த தகவலின்படி சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். வரி செலுத்தப்படாத 3,828 கார்ட்டன் மற்றும் 3,085 சிகரெட் பொட்டலங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன. ஓர் இந்தோனீசியர், மூன்று சிங்கப்பூரர்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர்.