பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் கடந்த ஆண்டு பட்டயம் பெற்ற மாணவர்கள் அதற்கு முந்தைய ஆண்டுகளில் பட்டயம் பெற்றவர் களைவிட நல்ல வேலைவாய்ப்புக் களையும் உயர்ந்த ஊதியங் களையும் பெற்றுள்ளதாக நேற்று வெளியான வேலைவாய்ப்பு தொடர்பிலான ஆய்வறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டு பட்டயம் பெற்றவர்களில் 89.5 விழுக்காட்டினர் பட்டயம் பெற்ற ஆறு மாதங்களுக்குள் நிரந்தர, பகுதிநேர பணிகளில் அமர்ந்ததாக அது குறிப்பிட்டது. 2017ஆம் ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிடுகையில் இது 2.2% அதிகம். கடந்த ஆண்டு பட்டயம் பெற்று இன்னும் வேலை தேடிக்கொண்டி ருப்போர் 8.2% எனவும் அதற்கு முந்தைய ஆண்டில் அது 9.7 விழுக்காடாக இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டது.
'2018ல் பட்டயம்: மேம்பட்ட வேலை, ஊதியம்'
1 mins read

