நியாயமற்ற வேலை நடைமுறை களுக்காக 521 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தெரிவித்த மனிதவள அமைச்சு, 2013ஆம் ஆண்டி லிருந்து 2017ஆம் ஆண்டு வரை எச்சரிக்கை விடுப்பது அல்லது தடைவிதிப்பது என இந்நிறுவனங் கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக கூறியது. இதில் 300 நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள துடன், 221 நிறுவனங்களுக்கு, அதாவது 42 விழுக்காடு நிறு வனங்களுக்கு, வெளிநாட்டு ஊழியர் அனுமதி கிடைப்பது சிரம மாக்கப்பட்டுள்ளது. இதை நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகமது, "எனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம். அத்துடன், ஊழியர் கள், முதலாளிகள் என இரு தரப்பினருக்கும் நியாயமான முறை யில் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியுள்ளது," என்று நியமன நாடாளுமன்ற உறுப்பினரான வால்டர் தெசேராவின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது விளக்கினார்.
ஸாக்கி முகமது: தவறு செய்யும் முதலாளிகள் பெயர்களைக் குறிப்பிடுவது உகந்ததல்ல
1 mins read

