சிங்ஹெல்த் இணையத் தாக்குதல்: 11 பிரிவுகளில் கூடுதல் பாதுகாப்பு

சுகாதாரப் பராமரிப்பு அமைப்புக்களின் குழுமமான 'சிங்ஹெல்த்' இணையக் கட்டமைப்பில் சென்ற ஜூன் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய இணைய ஊடுருவல் சம்பவம் தொடர்பில் விசாரணைக் குழு சென்ற வாரம் தனது பரிந் துரைகளை வெளியிட்டிருந்தது. இதன் தொடர்பில் பொதுத்துறை கணினிக் கட்டமைப்புகளில் கூடு தல் இணையப் பாதுகாப்பு வேண் டும் என்று நேற்று இணையப் பாது காப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நாடாளு மன்றத்தில் கூறினார்.

மென்பொருளை அடிக்கடி மேம்படுத்துவது போன்ற இணையப் பாதுகாப்புப் பணிகளை உடனுக்குடன் செய்யக் கூடுதல் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும். அத்துடன் இணைய ஊடுருவல் சம்பவங்கள் தொடர்பில் பொதுத் துறை அதிகாரிகளின் தயார் நிலையை மேம்படுத்தப் பாதுகாப்பு தொடர்பான தணிக்கை, பயிற்சி நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப் படும். இவ்வாறு நாட்டின் 11 முக்கியத் தகவல் உள்கட்டமைப்புப் பிரிவுகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப் படும். விசாரணைக் குழு பரிந்துரை செய்துள்ளபடி பொதுமக்கள், செயல்முறை, தொழில்நுட்பம், பங் காளித்துவம் ஆகியவற்றிலும் பொதுத்துறை தன் தற்காப்பைத் தொடர்ந்து வலுப்படுத்திக்கொள்ளும் என்று அமைச்சர் ஈஸ்வரன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!