வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தேவைக்கேற்பக் கட்டப்படும் வீடுகளுக்கு விண்ணப்பித் தோரில் கிட்டத்தட்ட 900 பேர் தங்கள் விண்ணப்பங்களைச் சென்றாண்டு மீட்டுக்கொண்ட தாக நேற்று நாடாளுமன்றத்தில் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார். ஜூரோங் குழுத்தொகுதியைச் சேர்ந்த ஆங் வெய் நெங், எழுப் பிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார். ரத்து செய்யப்பட்ட விண்ணப்பங்களில் 38% நான்கு அறை வீடுகள், 25% இரண்டறை அல்லது அதற்கு ஒப்பான வீடு கள், 22% ஐந்தறை வீடுகள், 15% மூவறை வீடுகள் என அவர் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
900 பேர் வீடு வாங்கும் விண்ணப்பங்களை மீட்டனர்
1 mins read
-

