ஒருவர் மற்றவரிடம் போதைப் பொருளை அறிமுகம் செய்வதோ அதனை உட்கொள்ளுமாறு அல்லது வாங்குமாறு சொல்வதோ உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய சட்ட மாறுதல்களுக்கு இணங்கக் குற்றமாகும். போதைப்பொருள் தவறான பயன்பாட்டுச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அம்மாறுதல் கள் குறித்து நேற்று நாடாளு மன்றத்தில் விவாதிக்கப்பட்டது. "'போதைப்பொருள் குற்றத்தைத் தூண்டும் நடத்தை' என் பது போதைப்பொருள் கடத்தி அல்லது கடத்திக்கு உடந்தை என்ற வரையறைக்குள் அடங் காது. "ஆனாலும் போதைப்பொருள் மூலமான துன்புறுத்தல் பரவுவதற்கு அது வழிவகுக்கும். அத்துடன் மற்றவர்களை அது தொல்லைப்படுத்தும்," என்று மன்றத்தில் நிகழ்ந்த விவாதத்தின்போது சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் விளக்கினார்.
போதைப்பொருள் சட்ட மாற்றங்களில் குழந்தை பாதுகாப்பும் அடங்கும்
1 mins read

