சிங்கப்பூர்-மலேசியா உறவு நல்ல நிலையில் இருக்கிறது- மலேசியா

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவுகள் நல்ல நிலையில் இருந்து வருவதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா தெரிவித் துள்ளார். இருநாடுகளுக்கும் இடையே ஆகாயவெளி, கடற்துறை தொடர் பான பூசல்கள் நீடித்துவரும் வேளையில், மலேசியா அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். "சிங்கப்பூருடனான மலேசியா வின் உறவு நன்றாகவே உள்ளது. சில பிரச்சினைகள் இருந்தாலும் இரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று பேச்சு நடத்தி வருகின்றன. இது மிக முக்கியமானது," என்று திரு சைஃபுதீன் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டு உள்ளது. "மிக முக்கியமாக, பேச்சு வார்த்தைகள் தொடர்கின்றன. அவை சரியான பாதையில் செல் கின்றன என உறுதியாக நம்பு கிறேன்," என்றார் அவர். தம்முடன் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி, தலைமைச் சட்ட அதிகாரி டோமி தாமஸ், வெளி யுறவு அமைச்சின் பொதுச் செய லாளர் முகம்மது ஷாருல் இக்ராம் யாக்கோப் ஆகியோரும் சிங்கப் பூர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவர் என்று அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!