'உயர்தர போக்குவரத்துக்கு உயர்தர ஊழியரணி தேவை'

'உயர்தர போக்குவரத்துக்கு உயர்தர ஊழியரணி தேவை'

1 mins read

அடுத்த நிலப் போக்குவரத்துப் பெருந்திட்டத்திற்காக தேசிய போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கம் நேற்று பல பரிந்துரைகளை முன்வைத்தது. பெருவிரைவு போக்குவரத்து ரயில் சேவையில் தடை ஏற்படும்போது பொது மக்களும் உதவி நல்கித் தங்கள் பங்கை ஆற்றவேண்டும் என்ற பரிந்துரையும் அதில் அடங்கும். இனிவரும் ஆண்டுகளில் சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்துக் கட்டமைப்பை மேம்படுத்த 2040 நிலப் போக்குவரத்துப் பெருந்திட் டத்திற்கான ஆலோசனைக் குழு கருத்து திரட்டி வரும் வேளையில் இது போன்ற கிட்டத்தட்ட 12 பரிந் துரைகள் கூறப்பட்டன.

"பயணிகள் தொண்டூழியர் களாகப் பங்காற்றும் ஒரு சமூகத்தை சிங்கப்பூர் உருவாக்க வேண்டும். சேவைத் தடைகளின் போதும் நெருக்கடி காலங்களின் போதும் முன்னணியில் இருந்து சமாளிக்கும் ஊழியர்களுக்கு இவர்கள் உதவி அளிப்பதில் பயிற்சி பெற்றிருப்பவர்களாக இருக்கலாம்," என்றது சங்கம்.