'வங்கிக் கணக்கில் சந்தேகத்திற் குரிய நடவடிக்கைகள் கண்டு பிடிக்கப்பட்டதாக' 'பிஒஎஸ்பி' வங்கி வாடிக்கையாளர்களுக்கு மோசடி குறுந்தகவல்கள் அனுப் பப்பட்டு வருகின்றன. இதுபோன்ற மோசடி குறுந் தகவல்கள் பெற்றதாக வலைத் தளங்களில் தெரிவித்து வரும் மக்கள், குறுந்தகவலில் ஓர் இணையத் தொடர்பை 'கிளிக்' செய்யுமாறு குறிப்பிடப்பட்டிருப் பதையும் சுட்டினர். இணையத் தொடர்பை 'கிளிக்' செய்வோர் 'டிபிஎஸ்' அல்லாத ஓர் இணையப் பக்கத்திற்குச் செல்வர். இதன் தொடர்பில் இணையத் தளங்களையும் சமூக ஊடகத் தளங்களையும் வலம் வரும்போது கவனமாக இருக்கும்படி 'டிபிஎஸ்' வங்கி அதன் வாடிக் கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கி வாடிக்கையாளர்களை மீண்டும் குறிவைக்கும் மோசடி
1 mins read

