சிங்கப்பூரர்கள் இருவருக்கு எதிராக தடை உத்தரவு

சிங்கப்பூரர்கள் இருவருக்கு எதிராக தடை உத்தரவு

1 mins read
95e9e923-244a-47ac-8c63-11b966133e27
-
Google News Preferred Icon

முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ் லாமிய சமய மன்றத்தால் அங்கீ காரம் பெற்ற முன்னாள் சமய போதகருக்கு எதிராக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது, சமூகத்துக்கு அச்சுறுத்தலை ஏற் படுத்துவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவ டிக்கை எடுக்க அரசாங்கம் தயங் காது என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண் முகம் தெரிவித்துள்ளார்.

"அனைத்து சிங்கப்பூரர்களும் தங்கள் சமயத்தைப் பிரபலப்படுத்த லாம். ஆனால், அதேவேளையில் அச்செயல் வன்முறையைத் தூண் டாமலும் மற்ற இனங்களையும் சம யங்களையும் குறைகூறாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். "இதன் தொடர்பில் நாங்கள் கடுமையான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறோம். நமது மக்களும் சமயத் தலைவர்களும் இதைப் புரிந்துவைத்துள்ளார்கள். அதனால்தான் மற்ற உலக நாடுக ளுடன் ஒப்பிடும்போது, சிங்கப்பூர் இன, சமய ஒற்றுமைக்கு உதாரண மாகத் திகழ்கிறது," என்றும் திரு சண்முகம் நேற்று தமது அமைச்சு தடை உத்தரவு பற்றி அறிக்கையை வெளியிட்ட பிறகு செய்தியாளர் களிடம் பேசினார்.

நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்