உட்லண்ட்ஸ் வீட்டில் இந்திய பெண்ணின் சடலம்;

உட்லண்ட்ஸ் வீட்டில் இந்திய பெண்ணின் சடலம்;

1 mins read

34 வயது ஆடவர் கைது உட்லண்ட்ஸ் அவென்யூ 6ல் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் பெண் ஒருவரின் உயிரற்ற உடல் கிடந்ததன் தொடர்பில் ஆடவர் ஒருவர் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தங்க ளுக்கு நேற்று அதிகாலை 1.34 மணிக்குத் தகவல் கிடைத்தது என்று தெரிவித்த போலிஸ், உடனடியாக அங்கு விரைந்தது. அந்த வீட்டில் 41 வயதான இந்திய பெண் ஒருவரின் உடலை அவர்கள் பார்த்தனர்.

அவர் மரணமடைந்துவிட்டதை பின்னர் சிங்கப்பூர் குடிமைத் தற் காப்புப் படையின் மருத்துவ அதி காரிகள் உறுதி செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு இந்த மரணத்தில் சம்பந்தப்பட்டுள் ளார் என்ற சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவரின் அடையாளத்தை போலிஸ் உறுதி செய்தது. பின்னர் அந்த 34 வயது இந் திய ஆடவரை போலிசார் கைது செய்தனர். மரணமடைந்த பெண் ணும் கைது செய்யப்பட்ட ஆட வரும் முன்னரே அறிமுகம் ஆன வர்கள் என்று போலிஸ் கூறியது.

பெண் இறந்து கிடந்த உட்லண்ட்ஸ் அவென்யூ 6ல் உள்ள வீட்டில் போலிஸ் தடயவியல் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.