குடித்துவிட்டு டாக்சி ஓட்டியவர் கைது

குடித்துவிட்டு டாக்சி ஓட்டியவர் கைது

1 mins read

இருக்கை வார் அணியாததற்காக பிடிபட்ட டாக்சி ஓட்டுநர் சோதனைக்குப்பின் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இருக்கை வார் அணியாமல் பயணியுடன் டாக்சியை ஓட்டிச்சென்ற ஓட்டுநரைப் போக்குவரத்துப் போலிசார் கவனித்துவிட்டனர். சென்ற செவ்வாய்க்கிழமை காலை 8.37 மணிக்குச் சிம்ஸ் அவென்யூவில் 41 வயது ஓட்டுநரின் வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டபோது ஓட்டுநர் மீது பலமான மது வாசனை அடித்தது. அவரை மேலும் சோதனைக்கு உட்படுத்தியபோது அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்பட்டது. இதன் தொடர்பில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். டாக்சி ஓட்டுநர்கள் பயணிகளை வைத்துக்கொண்டு இதுபோல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது மிக அரிது என்று தேசிய டாக்சி மன்றத்தின் நிர்வாக ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங் ஹின் கீ ஷின்மின் நாளிதழிடம் தெரிவித்தார். சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.