சட்டவிரோதமான முறையில் '4டி' பந்தயப்பிடிப்பை நடத்தி வந்த ஒரு தம்பதி, அரசாங்கத்திற்குக் கிட்டத்தட்ட $1.1 மில்லியன் கட்டவேண்டும் என்று உத்தரவு இடப்பட்டது. ஹெங் ஈ ஹொவ், 60, அவரின் மனைவி டின் சு சிë/„ங், 55, இருவரும் அரசாங்கத்திற்குப் பணம் செலுத்துமாறு செவ்வாய்க்கிழமை அன்று உத்தரவிடப்பட்டனர். இருவரின் வருமானமும் அவர்களிடம் இருந்த சொத்துகளும் சமமற்றதாக இருப்பதும் அதைக் குறித்து விளக்கமளிக்க முடியாததாக இருப்பதும் காவல்துறையினரால் சுட்டப்பட்டது. அவர்கள் 2010ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்கும் 2-015ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சட்டவிரோதப் பந்தயப்பிடிப்பு வழி பணம் சம்பாதித்ததாக கூறப்பட்டது.
சட்டவிரோதமாக பந்தயப் பணம் பெற்ற தம்பதி; $1.1 மி. கட்ட உத்தரவு
1 mins read

