திவால் வழக்கு விசாரணைக்குமுன் கடனைத் தீர்த்தார் லிம் தியன்

திவால் வழக்கு விசாரணைக்குமுன் கடனைத் தீர்த்தார் லிம் தியன்

1 mins read

ஒரு ஷங்காய் வர்த்தகருக்கு $203,000 கடனைத் திரும்பத் தரவேண்டிய எதிர்க்கட்சி அரசியல்வாதியும் வழக்கறிஞருமான லிம் தியன், தம் திவால் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வருவதற்கு முன்னரே இரு காசோலைகளின்வழி அக்கடனை அடைத்தார். இதனால் அவருடைய திவால் வழக்கு இரு வாரங் களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் காசோலை களில் எந்தவித சிக்கலும் இல்லாவிட்டால் திரு லிம் திவால் நிலையைத் தவிர்த்துவிடலாம். திரு லிம் திவாலானால் 2021ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாது.