மதுபானம் கலந்த உணவுப் பொருட்களை இரவு 10.30 மணிக்குப் பிறகு விற்கப்படுவது தடை செய்யப்பட்டு வந்தது. இன்றுமுதல் உள்துறை அமைச்சு அத்தடையை நீக்கியுள்ளது. மதுபானம் அல்லாத ஆனால் மதுபானம் கலந்துள்ள உணவுப் பொருட்களை எந்நேரத்திலும் வாங்க மதுபானக் கட்டுப்பாட்டுச் சட்டம் இனி அனுமதிக்கிறது. 2015ஆம் ஆண்டில் நடப்புக்கு வந்த இச்சட்டத்தின் கீழ் 0.5 விழுக்காடு மது கலந்த உணவும் பானமும் இரவு 10.30 மணிமுதல் காலை 7 மணிவரையில் விற்கப்படா என்று கூறியது. அத்துடன் பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படுவதைக் குறைக்க இந்த நேரத்தில் பொது இடங்களில் மது அருந்துவதும் தடை செய்யப்பட்டது.
இருப்பினும் இச்சட்டத்தை மறுஆய்வு செய்த அமைச்சு இனி மது கலந்த உணவுப்பொருட் கள் இச்சட்டத்திற்கு உட்படாது என்று அறிவித்துள்ளது. ஆனால் அளவுக்கு அதி கமாகக் குடிப்பதன் அடிப்படையில் மதுபானங்கள் தொடர்ந்து இந்தச் சட்டத்திற்கு உட்படுத்தப்படும் என்றது அமைச்சு. மது கலந்த சில உணவுப் பொருட்களை அளவுக்கு அதிக மாக உட்கொள்வது அவ்வளவாக சாத்தியப்படாது என்று பொதுமக் களும் தொழிற்துறை பங்குதாரர் களும் கருத்துத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சு, வர்த்தக, தொழில் அமைச்சுடன் கலந்தாலோசித்து இம்முடிவுக்கு வந்தது.

