'நிறுவனங்கள் ஊழியர்களிடம் போதிய முதலீடு செய்வதில்லை'

'நிறுவனங்கள் ஊழியர்களிடம் போதிய முதலீடு செய்வதில்லை'

1 mins read

மனிதவளம் தொடர்பான சவால் களைச் சமாளிக்க நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடத்தில் போதிய முதலீடு செய்வதில்லை என்று 705 நிறுவனங்களிடம் அண்மையில் நடத்தப்பட்ட தேசிய வர்த்தக ஆய்வு நேற்று தெரிவித் தது. தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ள பொருத்தமான ஊழியர் களின் பற்றாக்குறையும் மின்னிலக் கத் திறன்களை மேம்படுத்த ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளிப் பதுமே சென்ற ஆண்டு நிறுவனங் கள் சந்தித்த பெரும் சவால்கள் என்று கூறப்பட்டது. சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் (எஸ்பிஎஃப்) மேற்கொண்ட இந்த ஆய்வில் பங்கேற்றோரில் 12 விழுக்காட்டினர் மட்டுமே ஊழியர் களுக்குப் பயிற்சி அளிப்பதில் முதலீடு செய்ததாக கூறி இருந் தனர். இதன் தொடர்பில் ஊழியர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்வதுடன் வேகமாக மாறி வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தாக்குப்பிடிக்கவும் வேண்டும். அதற்கு நிறுவனங்கள் கூடுதல் வளங்களில் முதலீடு செய்து ஊழியர்களுக்குப் பயிற்சியளிப் பதில் தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்று எஸ்பிஎஃப்பின் தலைவர் டியோ சிë/„ங் செங் கூறினார். ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் உதவக்கூடிய அர சாங்க, தொழில்துறை திட்டங்கள் பற்றி நிறுவனங்கள் அறிந்திருக் காமல் இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் திரு டியோ சுட்டினார். இது குறித்த தகவல்கள் நிறு வனங்களைச் சென்றடையக் கூடுதல் முயற்சிகள் எடுப்பது இச்சிக் கலைத் தீர்க்கலாம் என்றார் அவர்.