குற்றம் புரியும் மருத்துவர்களுக் குத் தரப்படும் தண்டனைகள் நியாயமாகவும் சீராகவும் இருப் பதை உறுதிசெய்ய 16 உறுப்பினர் கள் அடங்கிய குழுவை சிங்கப்பூர் மருத்துவ மன்றம் அமைத்துள்ளது. இக்குழு தண்டனை விதிப்பின் போது கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சில வழிகாட்டுக் குறிப் புகளை உருவாக்கி ஒரு கட்டமைப் பைத் திட்டமிடும். கடந்த ஆண்டுகளில் விதிக் கப்பட்ட தண்டனைகளை வழி காட்டியாகக் கொண்டு தற்போது ஒரு மருத்துவருக்கு அபராதமோ இடைநீக்கமோ பணிநீக்கமோ முடிவெடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தண்டனைகள் சீரான முறையில் விதிக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தெளி வான தண்டனை விதிப்பு நெறி முறைகளை வகுக்குமாறு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒழுங்கீன விசாரணை மன்றம் கோரியது. இத்தெளிவான நெறிமுறை களால் புரியப்படும் குற்றங்களின் தீவிரத்தன்மையை மருத்துவர்கள் அறிந்துகொள்வர் என்று மன்றத்தின் தலைவர் பேராசிரியர் வால்ட்டர் டான் கூறினார்.
குற்றம் புரியும் மருத்துவர்களுக்குத் தண்டனை; நியாயத்தை உறுதிசெய்ய குழு
1 mins read

