ஐந்தில் மூன்று நிறுவனங்களில் இணையப் பாதுகாப்பு விதிமீறல்

ஐந்தில் மூன்று நிறுவனங்களில் இணையப் பாதுகாப்பு விதிமீறல்

2 mins read
a88933fe-d99a-4928-a14c-43ebe50083b4
-

சிங்கப்பூரில் கடந்த 12 மாத காலத் தில் ஐந்து சிறிய, நடுத்தர நிறுவ னங்களில் மூன்றில் இணையப் பாதுகாப்பு விதிமீறல்கள் நடந்து இருக்கின்றன. அவற்றின் விளைவாக தொழில் இடையூறுகள் ஏற்பட்டன. பல தகவல்களும் கசிந்துவிட்டன. இருந்தாலும் அப்படி தகவல்கள் வெளியான சம்பவங்கள் பற்றி, பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் 30 விழுக்காடு நிறுவனங்கள் மட் டுமே தங்களைப் பற்றி தங்கள் வாடிக்கையாளர்களிடமும் ஊழியர் களிடமும் தெரியப்படுத்தின. 'சுப்' (Chubb) காப்புறுதி நிறு வனம் 300 சிறிய, நடுத்தர நிறு வனங்களை உள்ளடக்கி நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விவ ரங்கள் தெரிய வருகின்றன.

சிறிய, நடுத்தர நிறுவனங்களை விட பெரிய நிறுவனங்கள் இணை யத் தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய ஆபத்து அதிகம் என்று தாங்கள் நம்புவதாக ஆய்வில் கலந்து கொண்ட நிறுவனங்களில் 60 விழுக்காட்டுக்கும் அதிக நிறுவ னங்கள் தெரிவித்துள்ளன. "இருந்தாலும் ஒப்பிட்டுப் பார்க் கையில் சிறிய நிறுவனங்கள், பெரிய நிறுவனங்களைப் போலவே அதே அளவுக்கு இணைய மிரட் டல்களை எதிர்நோக்குகின்றன. "ஆனால் அத்தகைய சிறிய நிறுவனங்களால் பரந்த அளவி லான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய இயலாது என்பதால் அவற் றுக்கு ஏற்படக்கூடிய கணிசமான பாதிப்புகள் வெளியே தெரியாமல் போய்விடக்கூடும்," என்று 'சுப்' ஆசியப் பசிபிக் நிறுவனத்தின் இணையக் காப்புறுதித் துறை நிர் வாகி ஆண்ட்ரு டைலர் தெரிவித் தார். சிறிய, நடுத்தர நிறுவனங்களை உள்ளடக்கிய அந்த ஆய்வு, சென்ற ஆண்டு ஆகஸ்ட், செப்டம் பர் மாதங்களில் நடத்தப்பட்டது. ஆய்வில் கலந்துகொண்ட நிறுவனங்கள், 200க்கும் குறைந்த ஊழியர்களை வேலையில் அமர்த்தியிருப்பவை.