பிரதமரின் 'பத்தாண்டு சவால்'

பிரதமரின் 'பத்தாண்டு சவால்'

1 mins read
9fc961a2-6247-42b4-8582-751cb701e1f5
பிரதமர் லீ சியன் லூங்; பத்து ஆண்டுகளுக்கும் முன்பும், இப்பொழுதும். -

ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பலர் அண்மைய நாட்களில் செய்துகொண்டிருக்கும் ஒன்றைப் பிரதமர் லீ சியன் லூங் இப்போது செய்துள்ளார்.

இவ்வாண்டில் எடுக்கப்பட்ட தமது படத்தை, 2009ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட தமது படத்துடன் இணைத்து, #10YearChallenge என்ற குறிப்புடன் பிரதமர் லீ பதிவேற்றினார். 'பத்தாண்டு சவால்' என்பது இதன் பொருள்.'சுதந்திர தலைமுறை' என்ற பொருளைக் கொண்ட #MerdekaGeneration என்ற தொடரையும் பிரதமர் தமது பதிவில் இணைத்துள்ளார். 1950களில் பிறகும் சிங்கப்பூரர்களை இது குறிக்கிறது.

தனது இரண்டு படங்களையும் திரு லீ தமது பதிவில் ஒப்பிட்டு எழுதினார். பத்தாண்டுகளில் தனது முடி நரைத்ததுடன் இன்னும் உதிர்வதாகவும் அவர் கூறினார். "இருந்தபோதும் நான் செய்வதை விருப்பத்துடன் செய்கிறேன்," என்று அவர் கூறினார்.

-பிரதமரின் இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் அமோக வரவேற்பைப் பெற்றது. சட்ட உள்துறை அமைச்சர் கா. சண்முகமும் நாடாளுமன்ற பேச்சாளர் டான் சுவான் ஜின்னும் இதுபோவலே தங்களது படங்களையும் பதிவேற்றி நல்வரவேற்பைப் பெற்றனர்.

பிரதமரின் ஃபேஸ்புக் பக்கத்தை 1.2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். அவரது இன்ஸ்டகிராம் கணக்கில் 362, 000 பேர் இணைந்துள்ளனர்.