முன்னைய அதிபர் வேட்பாளர் டான் செங் போக், புதிய கட்சி ஒன்றைத் தொடங்க விண்ணப்பித்திருக்கிறார்.
தாமும் தம்முடன் மனதளவில் ஒத்துப்போகும் 11 சிங்கப்பூரர்களும் இணைந்து கட்சியைத் தொடங்க இரண்டு நாட்களுக்கு முன்னர் விண்ணப்பித்ததாக டாக்டர் டான் இன்று தமது ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார்.
பல்லாண்டுகளாக பலதரப்பட்ட சிங்கப்பூரர்களுடன் பேசிய பின்னர் இந்த முடிவுக்கு வந்ததாக டாக்டர் டான் இந்தப் பதிவில் குறிப்பிட்டார். "நாடாளுமன்றத்தில் இவர்களைப் பிரதிநிதித்துப் பேசும் கடமை எனக்கு உள்ளது," என்றும் அவர் கூறினார்.

