முன்னாள் அதிபர் வேட்பாளரான டான் செங் போக், 78, ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்க விண்ணப்பித்துள்ளார். இரு நாட்களுக்குமுன் தாமும் ஒத்த கருத்துடைய 11 சிங்கப்பூரர் களும் சேர்ந்து 'சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (Progress Singapore Party)' எனும் கட்சி யைத் தொடங்க சங்கங்கள் பதிவகத்தில் விண்ணப்பித்துள்ள தாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் டாக்டர் டான் நேற்று பதிவிட்டு இருந்தார். அந்தப் பதினொருவரில் மக்கள் செயல் கட்சியின் முன் னாள் உறுப்பினர்கள் சிலரும் அடங்குவர் என இவர் கூறினார். கடந்த ஆண்டுகளில் தாமும் தமது குழுவும் பல்வேறு பின்னணி யைக் கொண்ட சிங்கப்பூரர்களைச் சந்தித்துப் பேசியதையடுத்து புதிய கட்சியைத் தொடங்கும் முடிவுக்கு வந்ததாக இவர் குறிப்பிட்டார். "நாடாளுமன்றத்தில் அவர் களைப் பிரதிநிதிக்கும் விதத்தில், முன்வந்து பணியாற்றுவது எனது கடமை என உணர்ந்தேன். ஆகை யால், நாடாளுமன்றத்தில் இன் னொரு குரலாக ஒலிக்க, புதிய கட்சி தொடங்கத் தீர்மானித்தேன்," என்று இவர் தெரிவித்துள்ளார். ஆயர் ராஜா தொகுதியின் முன்னாள் மசெக நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் டான் 2006ல் பதவி விலகினார். இப்போதுள்ள ஏதேனும் ஓர் எதிர்க்கட்சியுடன் இணைவது, ஏதேனும் ஓர் எதிர்க்கட்சியைத் தன்வசமாக்குவது, சுயேச்சையாகப் போட்டியிடுவது போன்ற பல தெரிவுகளைத் தாங்கள் ஆராய்ந்த தாக இவர் குறிப்பிட்டார்.
முன்னாள் அதிபர் தேர்தல் வேட்பாளர் டான் செங் போக் புதிய கட்சி தொடங்க விண்ணப்பம்
1 mins read

