ஜோகூர் முதல்வருக்கு அனுமதி

தனது அனுமதி பெற்றே சிங்கப்பூர் கடற்பகுதியில் இருந்த மலேசியக் கப்பலுக்கு ஜோகூர் முதல்வர் வருகை மேற்கொண்டதாகக் கூறப்படுவதை மலேசிய அரசாங்கம் மறுத்துள்ளது. ஜோகூர் முதல்வரின் அந்தத் திட்ட மிட்ட வருகை குறித்து இம்மாதம் 9ஆம் தேதி காலையிலேயே அறிய வந்ததாகவும் உடனடியாகவும் திரும்பத் திரும்பவும் முதல்வரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு 'கப்பலுக்குச் செல்ல வேண் டாம்' என அறிவுறுத்தியதாகவும் மலே சிய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. "கப்பலுக்குச் செல்வது, முதல்நாள் இடம்பெற்ற மலேசிய, சிங்கப்பூர் வெளி யுறவு அமைச்சர்களின் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் ஆக்ககரமான விளைவுகளுக்குக் குந்தகத்தை ஏற்ப டுத்தலாம் என்று அமைச்சு தனது கவலையைத் தெரிவித்தது," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. மலேசியக் கப்பல் நிறுத்தப்பட்டிருந்த பகுதி தனது கடல் எல்லைக்குள் வருகிறது என சிங்கப்பூர் கூறி வரும் நிலையில், அது ஜோகூர் துறைமுகத் திற்கு உட்பட்ட பகுதி என மலேசியா தெரிவித்து வருகிறது. இந்நிலையில், கப்பலுக்குத் தாம் சென்றுவர மலேசிய வெளியுறவு அமைச் சர் சைஃபுதீன் அப்துல்லாவின் அதிகா ரபூர்வமற்ற ஆசி கிட்டியதாகவும் ஜோகூர் முதல்வர் ஒஸ்மான் சப்பியான் கடந்த வியாழக்கிழமை கூறியிருந்தார். "நான் கப்பலுக்குச் செல்வதை அவர்கள் தடுக்கவில்லை," என்றார் திரு ஒஸ்மான். தான் தொடர்புகொண்டபோது, திரு ஒஸ்மான் ஏற்கெனவே ஒரு கப்பலில் இருந்ததாகவும் அது ஜோகூர் துறை முகத்தை நோக்கிச் சென்றதாகவும் அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது. இதையடுத்து, கடந்த திங்கட்கிழமை நடக்கவிருந்த சிங்கபூர்=மலேசியா வரு டாந்திர சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. திரு ஒஸ்மான் அத்துமீறி தனது கடல் பகுதிக்குள் நுழைந்ததாக சிங்கப்பூர் கூறி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!