தேசிய பாதுகாப்பு ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில், உள்துறை அமைச்சின்கீழ் புதிய அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு ஒன்று அமைக்கப்பட உள்ளது. அந்த அமைப்பு இவ்வாண்டு அமைக்கப்படும். எல்லைப் பாதுகாப்பு, முக்கிய உள்கட்டமைப்பு களைப் பாதுகாப்பது உள்ளிட்ட அம்சங்களில் ஆய்வு, கொள்முதல் பணிகளுக்கு அந்த அமைப்பு பொறுப்பு வகிக்கும். உள்துறை குழுவின் செயல்பாட்டு தேவைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு அறிவியல், தொழில்நுட்ப ஆற்றலை உருவாக்க அமைப்பு ஒன்றை அமைப்பது குறித்து தான் ஆராய்ந்து வருவதாக ஸ்ட்ரெட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் உள்துறை அமைச்சு கடந்த புதன்கிழமை தெரிவித்தது. "சிங்கப்பூரை பாதுகாப்பதற்கு உள்துறை குழுவிடம் உள்ள திறனை இந்த அறிவியல், தொழில்நுட்ப ஆற்றல்கள் வலுப்படுத்தும். "இது குறித்த கூடுதல் விவரங்கள் தயாராகும்போது அவை அறிவிக்கப்படும்," என்று உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆற்றலை மேம்படுத்த புதிய அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு
1 mins read

