தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூருக்கு எஃப்-35ரக போர் விமானங்கள்

1 mins read

சிங்கப்பூருக்கு மிகவும் பொருத்த­மான அடுத்த தலைமுறை போர் விமானங்களாக அமெரிக்காவின் எஃப்=35 ரக போர் விமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது. எஃப்=35 ரக போர் விமானங்­களின் திறன்களை அறிந்து­ கொள்ளவும் எஃப்=16 ரக போர் விமானங்களுக்கு மாற்றாகப் பயன்­ படுத்த அதன் ஏற்றதுதானா என்பதை முடிவுசெய்வதற்கும் குறைந்த எண்ணிக்கையிலான எஃப்=35 ரக போர் விமானங்களை வாங்குவது பற்றி சிங்கப்பூர் குடியரசின் ஆகாயப்படை அமெரிக்­காவுடன் பேச்சு நடத்தும். வரும் 2030க்குப் பின்னர் பயன்பாட்டில் இருக்க முடியாத எஃப்=16 ரக போர் விமானங்­களுக்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்த தங்களது தொழில்நுட்ப மதிப்பீடுகளை சிங்கப்பூர் குடிய­ரசின் ஆகாயப்படையும் தற்காப்பு அறிவியல் தொழில்நுட்ப முகவை­யும் (டிஎஸ்டிஏ) முடித்துவிட்டதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது. "எனினும், முழுமையான கொள்­முதலை முடிவுசெய்வதற்கு முன்ன­ தாக, குறைந்த எண்ணிக்கை­­ யிலான எஃப்=35 ரக போர் விமானங்களின் முழுமையான திறனையும் அது பொருத்தமானது­தானா என்பதையும் அறிந்து­ கொள்ள குடியரசின் ஆகாயப்படை முதலில் குறைந்த அளவில் அந்த விமானங்களை வாங்க வேண்டும்," என்று அந்த தொழில்நுட்ப மதிப்­பீடு கூறியுள்ளது.