ஈசூன், புக்கிட் பாத்தோக்கில் இரு கார்கள் தீக்கிரை; எவருக்கும் காயமில்லை

ஈசூன், புக்கிட் பாத்தோக்கில் இரு கார்கள் தீக்கிரை; எவருக்கும் காயமில்லை

1 mins read

ஈசூன், புக்கிட் பாத்தோக் பகுதிகளில் கடந்த புதன்கிழமை, வியாழக்கிழமை நிகழ்ந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் இரு கார்கள் தீப்பிடித்துக்கொண்டன. இந்த இரு சம்பவங்களிலும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. புளோக் 349 ஈசூன் அவென்யூ 9க்கு அருகே திறந்தவெளி கார் நிறுத்துமிடத்தில் முதல் சம்பவம் நிகழ்ந்தது. தகவல் அறிந்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் புதன்கிழமை இரவு 9.50 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் நீரைப் பீய்ச்சி தீப்பிடித்த கருப்பு நிற 'ஆடி' காரை அணைத்தனர். இரண்டாவது தீச்சம்பவம் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 5ல் வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் நிகழ்ந்தது.