'டவர் டிரான்சிட்' பேருந்து நிறுவனத்தை வழிநடத்த புதிய தலைவர் நியமனம்

'டவர் டிரான்சிட்' பேருந்து நிறுவனத்தை வழிநடத்த புதிய தலைவர் நியமனம்

1 mins read

சிங்கப்பூரில் இயக்கப்படும் பிரிட்டிஷ் பேருந்து நிறுவனமான 'டவர் டிரான்சிட்', அதன் செயல்பாடுகளை வழிநடத்த புதிய தலைவரை நியமித்துள்ளது. ஆக அண்மையில் எஸ்டி இன்ஜினியரிங் (லேண்ட் சிஸ்டம்ஸ்) நிறுவனத்தில் நிர்வாக உதவித் தலைவராகவும் அதன் தலைமை விளம்பர அதிகாரியாகவும் பொறுப்பு வகித்த 58 வயது வின்ஸ்டன் டோ, பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து டவர் டிரான்சிட்டில் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ளார். முன்னதாக சிங்கப்பூர் ஆயுதப் படையில் பிரிகேடியர்=ஜெனரல் பதவி வகித்தார் திரு டோ. அவருக்கு அங்கு 27 ஆண்டுகால அனுபவம் உள்ளது. 2015ஆம் ஆண்டில் டவர் டிரான்சிட் சிங்கப்பூர் நிறுவனத்தை அமைத்த திரு ஆன்ட்ரூ புஜ்டோர், கடந்த செப்டம்பரில் அந்நிறுவனத்தைவிட்டு பதவி விலகினார். அவருக்குப் பதிலாக திரு தோ இப்பதவியை ஏற்கவிருக்கிறார். இங்கு 29 பேருந்துப் பாதைகளை இயக்கும் டவர் டிரான்சிட்டில் கிட்டத்தட்ட 900 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.