கோயம்புத்தூர்: தமிழகத்தில் 20% கிராமப்புற பள்ளிக்கூடங் களில் பிள்ளைகளுக்குக் குடிநீர் வசதி இல்லை என்று கிராமியக் கல்வி நிலைய அறிக்கை 2018 தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் வெளியிடப் படும் அந்த அறிக்கை, சென்ற ஆண்டில் மொத்தம் 750 கிரா மியப் பள்ளிக்கூடங்களை உள் ளடக்கி இருந்தது. தமிழகத்தில் 90.2% கிராமப்புற பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தக்கூடிய நிலையில் கழிவறைகள் உள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. 86.2% கிராமியப் பள்ளிகளில் பெண்களுக்காகத் தனி கழிவறை வசதி இருக்கிறது. 6% பள்ளிக் கூடங்களில் கழிவறைகளின் நிலைமை சரியில்லை. 3.9% பள்ளிக்கூடங்களில் பெண்களுக்காக தனி கழிவறைகள் இல்லை. 52.4% பள்ளிகளில் மாணவ, மாணவியர் அன்றாடம் நூலகங்களைப் பயன்படுத்துகிறார்கள். 16.2% பள்ளிக்கூடங்களில் நூலகங்களே இல்லை. 29.3% பள்ளிகளில் பிள்ளைகள் கணினிகளைப் பயன்படுத்துகிறார்கள். 42.1% பள்ளிக்கூடங் களில் கணினி இல்லை என்று அறிக்கை தெரிவிக்கிறது.
20% பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை
1 mins read

