சுர்பானா ஜூரோங்: புதிய வளாகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா

சுர்பானா ஜூரோங்: புதிய வளாகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா

1 mins read
f0e0c178-8db7-44d1-9bf1-76fadf2e5355
புதிய வளாகத்தின் மாதிரி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிமிடம் (வலமிருந்து மூன்றாவது) விளக்கம் அளிக்கப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

நகர, உள்கட்டமைப்பு ஆலோசனை நிறுவனமான சுர்பானா ஜூரோங் புதிய வளாகம் ஒன்றைக் கட்டுகிறது. இந்த வளாகம் புதிய ஜூரோங் புத்தாக்க வட்டாரத்தில் அமைகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. புதிய வளாகத்துக்கான கட்டுமானப் பணிகள் 2021ஆம் ஆண்டுக்குள் நிறைவுபெறும். புதிய வளாகத்தில் ஏறத்தாழ 4,000 ஊழியர்கள் பணிபுரியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுர்பானா ஜூரோங்கின் புதிய வளாகம் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் கட்டப்படுகிறது. அப்பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆய்வுக்கூடம் ஒன்றை சுர்பானா ஜூரோங் கடந்த ஆண்டு அமைத்தது. அந்த ஆய்வுக்கூடம் தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் ஆதரவுடன் அமைக்கப்பட்டது. நகர்ப்புறப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண புதிய வளாகத்தில் வழிவகைகள் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.