பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய தம்பதியர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய தம்பதியர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

1 mins read
e289b18d-de2b-4129-9aff-0f1d64d02e79
-

தங்கள் பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய தம்பதியரைக் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 39 வயது லிண்டா சியா லே சியேவுக்கும் அவரது கணவரான 44 வயது லிம் தூன் லெங்குக்கும் எதிராக அடுத்த மாதம் 11ஆம் தேதியன்று தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மியன்மார் நாட்டைச் சேர்ந்த பியூ பியூ மார் என்பவரை அவர்கள் இருவரும் துன்புறுத்தினர். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து திருவாட்டி மாரைத் தனக்குத் தானே காயம் விளைவிக்க செய்தனர். திருவாட்டி மாரை அவரது கையாலேயே அவரது உடலில் கொதிக்கும் நீரை ஊற்ற வைத்தனர். அதுமட்டுமல்லாது, அசுத்தமான தண்ணீரை அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட வைத்தனர். இது ஒருபுறம் இருக்க, திருவாட்டி மாருக்கு அவர்கள் சம்பளம் கொடுத்ததே இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் போதுமான உணவு கொடுக்காததால் 50 கிலோ எடையிலிருந்து 38 கிலோவுக்குத் திருவாட்டி மார் குறைந்தார். குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்ட லிண்டா சியா லே சியே (இடது), அவரது கணவர் லிம் தூன் லெங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்