சிங்கப்பூரிலுள்ள வேலையிடங்களில் ஆண், பெண் சமத்துவம் குறித்த கலந்துரையாடல்கள் பல்லாண்டுகளாக நடைபெறுகின்றன. ஆயினும், இரு பாலருக்கும் இடையிலான சம்பள வித்தியாசம் 2017ஆம் ஆண்டு ஜூனில் 35 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை இருந்தது. ஒட்டுமொத்தமாக, முழு நேர வேலை செய்யும் பெண்ணின் சராசரி மாத சம்பளம், ஆணின் சம்பளத்தைவிட 9 விழுக்காடு அதிகம். இன, சமய, ஆண் பெண் வேறுபாடு இன்றி அனைவருக்கும் நியாயமான அளவில் சம்பளம் கொடுக்கப்படவேண்டும் என்று நியாயமான ஆட்சேர்ப்பு வழிமுறைகள் குறிப்பிட்டாலும் உண்மையில் முன்னேற்றம் தேவைப்படுவதாக சிங்கப்பூரின் மனிதவள கழகத்தின் தலைவர் எர்மன் டான் தெரிவித்தார். பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதற்காக வேலையிலிருந்து தற்காலிக ஓய்வு எடுத்து பெண்கள் இதற்குக் காரணம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால் இவர்கள் ஆண்களைக் காட்டிலும் குறைவான வேலையையும் பயிற்சி அனுபவத்தையும் பெறுகின்றனர். இதனால் அவர்களால் அதிக சம்பளத்தை தங்களுக்காகக் கேட்டுக்கொள்ள சிரமமாக இருப்பதாக ரேன்ட்ஸ்டெட் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குநர் ஜெயா தாஸ் தெரிவித்தார்.
பெண்கள் ஆண்களைவிட 9 விழுக்காடு குறைவாக சம்பாதிக்கின்றனர்
1 mins read
-

