ஆயர் ராஜா விரைவுச்சாலையில் வாகன விபத்து

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் வாகன விபத்து

1 mins read
325322d5-3cae-41ac-8ff6-fe9ead5f6e6a
-
Google News Preferred Icon

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை வேன் ஒன்று மோதியதை அடுத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

விரைவுச்சாலையின் ஆக வலத்தடத்தில் இந்த விபத்தைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.

மோதலில் மோட்டார் சைக்கிளோட்டி தனது சைக்கிளைவிட்டு தூக்கி எறியப்பட்டார்.

சம்பவத்தின்போது மழை பெய்துகொண்டிருந்ததாக காணொளியில் தென்பட்டது.

உதவிக்கான அழைப்பு நேற்று மாலை 5.46 மணிக்கு வந்ததாக போலிசார் தெரிவித்தனர். தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளோட்டி சுயநினைவுடன் அனுப்பப்பட்டார்.