மலேசிய உணவுப் பொருளில் உலோகத் துரும்பு

மலேசிய உணவுப் பொருளில் உலோகத் துரும்பு

1 mins read
8d3e2373-ab4d-4e50-b597-c579918469e4
'டா ஜி டா லி' நிறுவனத்தின் 'பீனட் பஃப்' பலகாரத்திற்குள் உலோகத் துரும்பு. -

சீனப் புத்தாண்டுக்கான பலகாரப் பொருளுக்குள் உலோகத் துரும்பு ஒன்று காணப்பட்டதை அடுத்து இந்தப் பலகாரம் கடைகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

'டா ஜி டா லி' நிறுவனத்தின் 'பீனட் பஃப்' பலகாரத்தை மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்த நிறுவனத்திடம் இதனை மீட்க உத்தரவிட்டுள்ளதாக வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் (ஏவிஏ) தெரிவத்தது.

"பலகாரங்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் இயந்திரம் ஒன்றிலிருந்து ஓர் உலோக துரும்பு பலகாரப் பொட்டலம் ஒன்றுக்குள் விழுந்ததாக ஏவிஏ நடத்திய விசாரணையின் மூலம் தெரிய வந்தது," என்று ஏவிஏ தெரிவித்தது.

இந்தப் பலகாரத்தை வாடிக்கையாளர்கள் உட்கொள்ளாமல் இருக்குமாறு ஏவிஏ அறிவுறுத்தியுள்ளது.

'ஜயன்ட்' கடைகளில் மட்டும் விற்கப்படுகிற இந்தப் பலகாரம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தப் பலகாரத்தை பெண் ஒருவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது உலோகத் துரும்பு ஒன்றைக் கடித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கடந்த ஜனவரி 12ஆம் தேதி தெரிவித்தது.