பேருந்து விபத்து; 13 பேர் காயம்

பேருந்து விபத்து; 13 பேர் காயம்

1 mins read
34cfa570-9907-4102-bc72-fe195112c4b9
(படம்: ‌ஷின் மின் நாளிதழ் வாசகர்) -

பயனியர் ரோட்டில் பேருந்து ஒன்றுடன் லாரி மோதியதைத் தொடர்ந்து 13 பேர் காயமடைந்தனர். உதவிக்கான அழைப்பு நேற்று மாலை 5.12 மணிக்கு வந்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தோர் இங் டெங் ஃபொங் பொது மருத்துவமனைக்கும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டதாக அவர்கள் கூறினர்.

பேருந்து ஓட்டுநர் காயமடையவில்லை எனக் கூறப்படுகிறது. போலிசாரின் விசாரணை தொடர்கிறது.