சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதிலும் வர்த்தகங்க ளுக்கு முக்கிய பங்குண்டு என்று தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹோ சிங் தெரிவித்துள்ளார். "வர்த்தகங்களுக்கு லாபம் என்பது அவற்றின் நிதி பலம், நம்பகத்தன்மையின் சுருக்கெழுத்துக் குறியீடு போன்றவை. அதேவேளையில் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதைத் தங்கள் அடிப்படை இலக்காகக் கொண்டு செயல்பட்டால் தான் வர்த்தகங்கள் வெற்றி பெறும்," என்று திருவாட்டி ஹோ சிங் நேற்றுக் காலை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 4வது செயின்ட் கெல்லன் கருத் தரங்கில் முக்கிய உரையாற்றிய போது விவரித்தார்.
சுற்றுப்புறத்தை மையமாகக் கொண்ட அவரது உரையில், பருவநிலை மாற்றம் மற்றும் அத னால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள வர்த்தகங்கள் உட னடி நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் வலியுறுத்தினார். அதிக எரிசக்தி சேமிப்பு பொருளியல் தொடர்பான மாற்றங்கள் பற்றி பேசிய திருவாட்டி ஹோ சிங், வட்டார குளிரூட்டி முறையைப் பயன்படுத்தி பெரிய அளவிலான உள்கட்டமைப்புக்கு குளிரூட்டும் போது, குளிரூட்டிக்கான எரி சக்தியை அதிக அளவில் சேமிக்கலாம். இத்தகைய முறை மரினா பே வட்டாரத்தில் பயன்படுத்தப் பட்டு வருகின்றது என்றும் சுட்டினார்.

